சுவடிப் பாதுகாப்பின் இன்றியமையாமை


  •  முன்னோர்களின் பண்பாட்டுச் சின்னமாகச் சுவடிகள் விளங்குவதால் பழமையைப் பாதுகாக்கும் நோக்கில் சுவடிப்பாதுகாப்பு இன்றியமையாததாகும்.

  •  அன்று கற்றவர்க்குப் பயன்படும் கல்விசார் நிலையில் காணப்பட்ட சுவடிகள் இன்று காட்சிப் பொருளாக இளைய தலைமுறையினர்க்கு விளங்குகின்ற சூழலில் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றாகும்.

  • கையெழுத்துப் பிரதி நிலையில் இருக்கும் எண்ணற்ற நூல்கள் அச்சு வடிவம் பெறுவதற்காகவும் அவை பாதுகாக்கப்படவேண்டும்.

  • அச்சான நூல்களின் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழத்தேவையில்லை அவற்றையும் பாதுகாக்க வேண்டும்அச்சுரு பெற்றாலும் அவற்றை ஆய்வு செய்து செம்பதிப்பு கொணரும் நிலையில் உறுதுணையாக இருப்பது சுவடிகளேஇதிலிருந்து அச்சான நூல்களின் கையெழுத்துப் பிரிதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் உண்மை புலனாகும்.

  • அறிவியல் வளர்ச்சியும் ஆய்வு வளர்ச்சியும் பெருகிவரும் இக்காலக்கட்டத்தில் ஆய்வுத் துறையின் மூலச்சான்றுகளாகச் சுவடிகள் விளங்குவதால் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றாகும்.

  • வரலாற்று வரைவியலில் வரலாற்று இடைவெளியை நிரப்பவும் முரண்பாடுகளை இனம் கண்டு உண்மையை உயர்த்தவும் சுவடிகள் உறுதுணையாகும்எனவே சுவடிப்பாதுகாப்பு இன்றியமையாததாகும்.


Summer Sequential Programme for working people. It is a 30 days  regular programme. In this Programme has four paper. Paper I is Research methodologies. Paper II Department paper, Paper III Research relevant paper designed by concern guide, paper IV is General skill paper to support the dissertation.